/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சனவேலி பகுதியில் உழவு பணிகள் ஜரூர்
/
சனவேலி பகுதியில் உழவு பணிகள் ஜரூர்
ADDED : ஜூன் 24, 2024 11:42 PM
ஆர்.எஸ்.மங்கலம் : கடந்த மாதம் பெய்த கோடை மழையால் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்களில் ஈரப்பதம் உள்ளதால் உழவுப் பணி மும்முரமாக நடக்கிறது.
சனவேலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளாக ஓடைக்கால், குலமாணிக்கம், கண்ணுகுடி,மேல் பனையூர், ஏ.ஆர்.மங்கலம், கூடலுார், நத்தக்கோட்டை, மேட்டு கற்களத்துார், சவேரியார் பட்டினம், கொக்கூரணி, காவனக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் உழவுப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த மாதம் பெய்த மழையால் விளைநிலங்கள் ஈரப்பதத்துடன் காணப்படுவதை தொடர்ந்து விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதிகளில் நெல் விதைப்புக்கு ஏற்ற வகையில் விளை நிலங்களை உழவு செய்து மண்ணை வளப்படுத்த வேண்டி உள்ளதால் குறிப்பிட்ட நாள் இடைவெளிகளில் மீண்டும் உழவுப் பணியை மேற்கொள்ள உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.