/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் ஆலோசனை
/
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் ஆலோசனை
ADDED : மே 07, 2024 05:07 AM
பரமக்குடி: பரமக்குடியில் பொது இடங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சி பகுதிகளில் அவ்வப்போது பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. வங்கிகளில் பணம் எடுத்து வருவோரை கண்காணித்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது போன்றவர்கள் தங்களின் பணம் மற்றும் நகைகளை டூவீலர்உள்ளிட்ட வாகனங்களில் பெட்டியில் வைத்து விடுகின்றனர்.
மேலும் நிதி நிறுவனங்களில் இருந்து பணத்தை கொண்டு வருவோர் அவற்றை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கட்டைப்பைகளில் விலை உயர்ந்த பொருட்களை வைப்பது மற்றும் சாதாரணமாக அலைபேசி உள்ளிட்டவற்றை பாதுகாப்பின்றி கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் உட்பட பஸ்களில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதையொட்டி போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.