/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்ப்பாட்டத்தின் போது ரோடு மறியல் செய்ததால் போலீசார் அ.தி.மு.க.,வினரிடையே தள்ளுமுள்ளு
/
ஆர்ப்பாட்டத்தின் போது ரோடு மறியல் செய்ததால் போலீசார் அ.தி.மு.க.,வினரிடையே தள்ளுமுள்ளு
ஆர்ப்பாட்டத்தின் போது ரோடு மறியல் செய்ததால் போலீசார் அ.தி.மு.க.,வினரிடையே தள்ளுமுள்ளு
ஆர்ப்பாட்டத்தின் போது ரோடு மறியல் செய்ததால் போலீசார் அ.தி.மு.க.,வினரிடையே தள்ளுமுள்ளு
ADDED : ஜூன் 24, 2024 11:48 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தின் போது ராமேஸ்வரம் ரோட்டில் திடீர் மறியல் செய்தவர்களை தடுத்து போலீசார் சிலரை விசாரிக்க அழைத்து சென்ற போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் இறந்த சம்பவத்தில் தி.மு.க., அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச்செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், அன்வர்ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மலேசியா பாண்டியன், சதன்பிரபாகர், முத்தையா, மாநில மகளிரணி இணைச்செயலாளர் கிருத்திகா, ராமநாதபுரம் நகரச்செயலாளர் பால்பாண்டி, முன்னாள் நகரச்செயலாளர் வரதன், ராம்கோ சேர்மன்(பொ) தஞ்சிசுரேஷ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
கள்ளசாராயம் விற்பனையை தடுக்கவில்லை. 57 பேர் இறப்பிற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் சிலர் ராமேஸ்வரம் ரோட்டில் மறியிலில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுத்த போலீசார் விசாரணைக்காக சிலரை அழைத்துச்சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் நடந்தது.
சிறிநேரம் விசாரணைக்கு பிறகு அ.தி.மு.க.,வினரை போலீசார் விடுவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக போலீசார் கூறினர்.