/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் தரமற்ற கட்டுமானப் பணியால் சேதமடையும் போலீஸ் குடியிருப்பு வீடுகள் 2017ல் கட்டப்பட்டது

ADDED : ஜூலை 13, 2024 04:19 AM
கடலாடி : -கடலாடி போலீஸ் ஸ்டேஷன் அருகே போலீசார் குடியிருப்புகள் 2017ல் புதியதாக கட்டப்பட்டது. தரமற்ற கட்டுமானப்பணியால் சேதமடைகின்றன.
தமிழ்நாடு போலீசார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சார்பில் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடில் கட்டப்பட்ட 30 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் எஸ்.ஐ., 2 வீடுகள், இன்ஸ்பெக்டர் ஒரு வீடு என 33 குடியிருப்பு அமைதுள்ளது.
தரமற்ற கட்டுமானப் பணிகளால் 2020 முதல் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டும் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும் பொலிவிழந்து வருகிறது. கடலாடி மற்றும் சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் இங்குள்ள குடியிருப்புகளில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். போலீசார் கூறியதாவது: கடலாடியில் உள்ள போலீசார் குடியிருப்பின் பல கட்டுமானங்கள் தரமற்றிருப்பதால் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும் வண்ணங்கள் பொலிவிழந்தும் வருகிறது.
எனவே மராமத்து பணிகளை செய்தும் ஆபத்தான நிலையில் உள்ள மின் ஒயர்களை சரிசெய்து குறைகளை நிவர்த்தி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.