/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி
/
விபத்தில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ., பலி
ADDED : ஜூலை 11, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணி புரிந்த தென்கரை மகாராஜா 56, டூவீலர் விபத்தில் பலியானார்.
தேவிபட்டினத்தில் எஸ்.ஐ., யாக பணிபுரிந்தவர் தென்கரை மகாராஜா 56. இவர்கடந்த ஜூன் 29 இரவு பணி முடித்து உறவினர் முருகேசன் டூவீலரில் ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார். சிதம்பரம்பிள்ளை ஊருணி அருகே எதிரில் டூவீலருடன் மோதியதில் துாக்கி வீசப்பட்ட தென்கரை மகாராஜா, முருகேசன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென்கரை மகாராஜா நேற்று இறந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.