/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலிதீன் பை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
பாலிதீன் பை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 30, 2024 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், - ராமநாதபுரம் ரோட்டரி கிளப்பும், கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி, வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து ஒரு முறை பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரண்மனையில் இருந்து ஊர்வலத்தினை ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிவராமன் துவங்கி வைத்தார். ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தலைவர் பி.ஜெகதீசன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் ரோட்டரி கவர்னர் தினேஷ்பாபு மக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை கவர்னர் ரம்யா, ரோட்டரிச் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் அருண்குமார், மாவட்ட சமூக சேவையாளர் ராஜாராம்பாண்டியன் பங்கேற்றனர்.