நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள வளையக்கம்மன், மாடசாமி கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டினர்.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வளையக்கம்மன், மாடசாமி, பேச்சியம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. முக்கிய வீதிகளில் சுவாமி ஊர்வலமாக வந்தார்.