ADDED : ஆக 17, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருநாழி : பெருநாழி பத்திரகாளி அம்மன் கோயில் ஆடி உற்ஸவ விழா 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று பொங்கல் விழா நடந்தது.
மூலவர் விநாயகர், பத்திரகாளி அம்மன், நிறைகுளம் வள்ளியம்மன் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை தலைவர் ராமச்சந்திரன், காஞ்சிபுரம் வாழ் பெருநாழி உறவின்முறை தலைவர் முத்துகிருஷ்ணன், முனியசாமி, ராமகிருஷ்ணன், சென்னை வாழ் பெருநாழி காமராஜ், மாரியப்பன், பழனிக்குமார், ஆனந்த், பாலசுப்ரமணியன், ஆனந்தராமன், அம்பலம் போஸ் நாடார் பங்கேற்றனர்.
கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டனர். மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

