/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பப்பரப்புளி கோயிலில் பூக்குழி உற்ஸவம்
/
பப்பரப்புளி கோயிலில் பூக்குழி உற்ஸவம்
ADDED : பிப் 28, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடி அருகே ஏராம்துறை கிராமத்தில் உள்ள பப்பரப்புளி தர்ம முனீஸ்வரர், செல்வ விநாயகர், காளியம்மன், கருப்பண்ணசாமி, பாண்டி முனீஸ்வரர், மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மாசி களரி விழா நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் அக்னி வளர்க்கப்பட்டு நேர்த்திக்கடன் பக்தர்கள் இரவு 11:00 மணிக்கு பூக்குழி இறங்கினர். நேற்று காலை ஏராளமான நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். கிடாவெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூஜாரி முனியசாமி செய்திருந்தார்.
ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

