/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா
/
திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா
திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா
திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் சுவாமி கோயிலில் பூக்குழி விழா
ADDED : மே 24, 2024 02:14 AM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் கோயிலில் பூக்குழி விழா நடந்தது.
நயினார்கோவிலில் இருந்து 8 கி.மீ.,ல் திருக்கொளுவூர் கிராமம் ஆதி நாகநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஆதி நாகநாதர் புற்றடி மணலில் பழமை மாறாமல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
புற்று மணலை பக்தர்கள் பிரசாதமாக பெற்று அனைத்து வேண்டிய வரங்களை நாகநாத சுவாமி அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்ஸவ விழா நடக்கிறது. இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று பூக்குழியில் இறங்கினர். முன்னதாக ஆதி நாகநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து பூ வளர்க்கப்பட்டது. பின்னர் மாலை 6:30 மணிக்கு விரதம் இருந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை பரம்பரை இனம் டிரஸ்டி ஸ்தானீகம் குமாரசாமி பட்டர், மணிகண்டன் பட்டர் செய்திருந்தனர்.