ADDED : மே 07, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை பிடாரி அம்மன் கோயில் திருவிழா ஏப்.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் சுவாமி ஊர்வலம் நடந்தது. திருவாடானை அருகே செங்கமடை கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

