/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம்
/
சாயல்குடி பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம்
சாயல்குடி பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம்
சாயல்குடி பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம்
ADDED : ஏப் 30, 2024 10:36 PM
சாயல்குடி- -சாயல்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா ஏப்.24ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மூலவர் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் 608 விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். நேற்று மூக்கையூர் கடலில் பக்தர்கள் தீர்த்தமாடி மஞ்சள் நீர், பால்குடங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். சாயல்குடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடந்தது.
கோயில் முன்புறம் வளர்க்கப்பட்ட அக்னியில் நேற்று காலை 10:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று முளைப்பாரி ஊர்வலம், பாரி கங்கையில் சேர்க்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.