/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நுழைவு வாயிலில் காசநோய் வார்டு இருப்பதால் மக்கள் பாதிப்பு; l அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனை அவலம்

ADDED : மார் 25, 2024 06:27 AM

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கடந்தாண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 500 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் இருந்த அவசர சிகிச்சைப்பிரிவு வார்டு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
நுழைவு வாயில் பகுதியில் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த பகுதியில் தற்போது காச நோய் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள், வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்க்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகின்றனர்.
காச நோயாளிகள் இருமும் போது பரவும் கிருமிகள் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது. காச நோயாளிகள் எச்சில் துப்புவதிலிருந்தும், சளியிலிருந்தும் நோய்க் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும் நிலை உள்ளது. எனவே காச நோய் வார்டுகளை ஒதுக்குப்புறமான பகுதிகளில் அமைக்க வேண்டும்.
அதனை விடுத்து மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் அமைப்பதால் அரசு மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள், நோயாளிகள் அனைவரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காச நோய் வார்டை ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாற்ற வேண்டும்.-