/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வலையபூக்குளத்தில் நடந்த அஞ்சல் கிராமசபை கூட்டம்
/
வலையபூக்குளத்தில் நடந்த அஞ்சல் கிராமசபை கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 04:02 AM
கமுதி: கமுதி அருகே வலையபூக்குளத்தில் தபால் துறை சார்பில் அஞ்சல் கிராமசபை கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தலைமை வகித்தார். உப கோட்ட அலுவலர் செல்வம் வரவேற்றார்.
அரசின் திட்டங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டம், காப்பீடு, இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி சேவை, துரித அஞ்சல் சேவைகள் குறித்து மக்களுக்கு விளக்கினர். பொதுமக்களுக்கு சேமிப்பு கணக்கு, பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரங்கள், ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் மக்களுக்கு வீடு தேடி சென்று பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர். இதன் மூலம் வலையபூக்குளம் கிராமத்தில் 100 சதவீதம் மகிளா சம்பூர்ண கிராமமாக மாற்ற உறுதி எடுத்துக்கொண்டனர். முடிவில் கிளை அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.