/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்து காப்பீடு திட்டத்தில் சேரலாம் தபால் அலுவலர்கள் அறிவுரை
/
விபத்து காப்பீடு திட்டத்தில் சேரலாம் தபால் அலுவலர்கள் அறிவுரை
விபத்து காப்பீடு திட்டத்தில் சேரலாம் தபால் அலுவலர்கள் அறிவுரை
விபத்து காப்பீடு திட்டத்தில் சேரலாம் தபால் அலுவலர்கள் அறிவுரை
ADDED : மார் 07, 2025 08:46 AM
திருவாடானை : தபால் அலுவலகங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் சேரலாம் என தபால் அலுவலர்கள் கூறினர்.
தபால் அலுவலகங்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தங்க மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ், விபத்து காப்பீடு, நிரந்த சேமிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருவாடானை தபால் அலுவலர்கள் கூறியதாவது:
பணிபுரியும் இடம், வீடுகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துக்களின் போது காப்பீடு தொகை பெறும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம். விபத்து காப்பீடு திட்டத்தில் இணைய ஆதார் எண், அலைபேசி எண், வாரிசுதாரர் ஆகிய விபரங்களை கொண்டுவர வேண்டும்.
இந்த காப்பீட்டு திட்டத்தில் ரூ.320 செலுத்தினால் ரூ.5 லட்சம், ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சம், ரூ. 799 செலுத்தினால் ரூ.15 லட்சம் என்ற வகையில் விபத்து காப்பீடு பிரிமியம் தொகை செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம் என்றனர்.