/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்ச் 19ல் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்
/
மார்ச் 19ல் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்
ADDED : மார் 09, 2025 05:16 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் மார்ச் 19 காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
தபால் சம்பந்தப்பட்ட புகாரில் அனுப்பிய தேதி, நேரம், பெறுநரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு ஆகியவற்றுக்கான விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, காப்பீடு சம்பந்தமான புகார் எனில் கணக்கு எண், வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி, பணம் கட்டியவிபரம், செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை கடிதத் தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
ஏற்கனவே முகாமில் மனு கொடுத்து திருப்தியில்லை என்றால் தங்களது குறைகளை மட்டும் அனுப்பலாம். புதிய புகார் மனு தேவையில்லை. கூரியரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ராமநாதபுரம் அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.