/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செப்.23ல் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
/
செப்.23ல் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
ADDED : செப் 04, 2024 01:01 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் செப்.23 காலை 11:00 மணிக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பிய தேதி, நேரம், அனுப்பியர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகிய விபரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி, பணம் கட்டிய முழு விபரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
ஏற்கனவே புகார் அனுப்பி, அதற்குரிய பதிலால் திருப்தி அடையாதவர்கள் தங்களது குறைகளை மட்டும் அனுப்பி வைக்கலாம்.
அஞசல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அரண்மனை வளாகம், தெற்கு தெரு, ராமநாதபுரம் - 623 501 என்ற முகவரிக்கு செப்.17 க்குள் குறைகள் வந்து சேர வேண்டும். தனியார் கூரியரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.