/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லோக்சபா தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர் தபால் ஓட்டளிப்பு
/
லோக்சபா தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர் தபால் ஓட்டளிப்பு
லோக்சபா தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர் தபால் ஓட்டளிப்பு
லோக்சபா தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர் தபால் ஓட்டளிப்பு
ADDED : ஏப் 16, 2024 03:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது ஏராளமானவர்கள் தபால் ஓட்டளித்தனர்.
தமிழகத்தில் ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் உதவி அலுவலர்கள், பி.ஓ.,-1 முதல் 3 வரை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் வெளியூரில் இருந்து ராமநாதபுரத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களிடம் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
நேற்று ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுச்சவாடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது.
அங்குகாலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை ஏராளமான அலுவலர்கள் ஆர்வத்துடன் தபால் ஓட்டளித்தனர்.
அரசியல் கட்சி பிரதிகளின் ஏஜென்ட்கள் பங்கேற்றனர். அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
*திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் மாரிச்செல்வி, தாசில்தார் கார்த்திகேயன் முன்னிலை யில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 812 பேர் தபால் ஓட்டுகளை செலுத்தினர்.

