/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லஞ்ச ஒழிப்பு போலீசாரை பாராட்டி போஸ்டர்கள்
/
லஞ்ச ஒழிப்பு போலீசாரை பாராட்டி போஸ்டர்கள்
ADDED : ஜூலை 11, 2024 04:57 AM

தொண்டி: தொண்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பாராட்டி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தொண்டியில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன், கம்யூட்டர் ஆப்பரேட்டர் தொண்டிராஜ் ஆகியோரை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் ஜூலை 4ல் கைது செய்தனர்.
இதைப் பாராட்டி தொண்டி பகுதியில் மக்கள் நலப்பணிக்குழு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் புரையோடிப்போன லஞ்சம் மற்றும் ஊழலை தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உதவிய நமது நண்பர்கள் அனைவருக்கும் தொண்டி மக்களின் சார்பாக வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள். அரசுத்துறையில் லஞ்சம் மற்றும் ஊழலில்லா துாய்மையான நகராக தொண்டியை உருவாக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம் என்று அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.