/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் வறுமை தலை விரித்தாடுகிறது தனுஷ்கோடி வந்த அகதி வேதனை
/
இலங்கையில் வறுமை தலை விரித்தாடுகிறது தனுஷ்கோடி வந்த அகதி வேதனை
இலங்கையில் வறுமை தலை விரித்தாடுகிறது தனுஷ்கோடி வந்த அகதி வேதனை
இலங்கையில் வறுமை தலை விரித்தாடுகிறது தனுஷ்கோடி வந்த அகதி வேதனை
ADDED : ஜூலை 05, 2024 10:57 PM

ராமேஸ்வரம்:-இலங்கையில் வறுமை காரணமாக அங்கு வாழ்வதற்கு வழியின்றி படகில் தனுஷ்கோடி வந்தோம் என அகதிகள் வேதனை தெரிவித்தனர்.
இலங்கை தலைமன்னார் சேர்ந்த யோகவள்ளி 34, இவரது 8 வயது மகள், 6 வயது மகன், அகதியாக படகில் புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வந்திறங்கினர். இவர்களிடம் படகு கூலியாக ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் வாங்கிய இலங்கை படகோட்டிகள் அகதிகளை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு இந்திய பாதுகாப்பு படைக்கு தெரியாமல் மீண்டும் இலங்கை திரும்பிச் சென்றனர்.
அகதி யோகவள்ளியிடம் தனுஷ்கோடி மரைன் போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கையில் வேலைவாய்ப்பு இன்றி அன்றாட வருவாய்க்கு மக்கள் பரிதவிக்கின்றனர். இனிவரும் காலத்தில் மேலும் வறுமை தலைவிரித்தாடும் அபாயம் உள்ளது. ஆகையால் அங்கு வாழ முடியாமல் கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி வந்தோம் என வேதனையுடன் தெரிவித்தார்.