/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காற்றில் சாய்ந்த மின்கம்பத்தால் மின்தடை: போக்குவரத்து பாதிப்பு
/
காற்றில் சாய்ந்த மின்கம்பத்தால் மின்தடை: போக்குவரத்து பாதிப்பு
காற்றில் சாய்ந்த மின்கம்பத்தால் மின்தடை: போக்குவரத்து பாதிப்பு
காற்றில் சாய்ந்த மின்கம்பத்தால் மின்தடை: போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 03, 2024 02:54 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழக்குளம் கிராமத்தில் காற்றுடன் பெய்த மழையால் ரோட்டோரம் மின்கம்பம் சாய்ந்து உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்தடை ஏற்பட்டது.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. கீழக்குளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது.
கீழக்குளம் கிராமத்திற்கு செல்லும் மின்கம்பம் சாய்ந்து உயிர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. கீழக்குளம்- பெருங்கருனை செல்லும் வழியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அவ்வழியே மக்கள் செல்வதற்கு சிரமப்பட்டனர்.
கீழக்குளம் சிறுகுடி, பெருங்கருணை, நல்லாங்குளம் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.