ADDED : ஏப் 10, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே அ.தரைக்குடி, புனவாசல் கிராமங்களில் வி.ஐ.டி பல்கலை, மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை இணைந்து மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.
பேராசிரியர் சத்தியவேலு தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: நெல், மிளகாய், பருத்தி சிறுதானிய பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் ரசாயன உரங்கள் தவிர்க்கப்பட்டு இயற்கை உரங்கள் இட வேண்டும். மண்புழு உரம், தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வேளாண்மையின் முக்கிய அங்கமாக மண்புழு உரம் திகழ்கிறது என்றார்.
உடன் இயற்கை விவசாயி முத்துராமலிங்கம் உட்பட பயிற்றுநர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

