/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் நீதிமன்றம் முன் யோகா பயிற்சி
/
ராமேஸ்வரம் நீதிமன்றம் முன் யோகா பயிற்சி
ADDED : ஜூன் 23, 2024 03:43 AM
ராமேஸ்வரம்: உலக யோகா தினத்தையொட்டி ராமேஸ்வரம் நீதிமன்றம் முன் நீதிபதி, சமூக ஆர்வலர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
உலக யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும்முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் முன் யோகா பயிற்றுனர் களஞ்சியம் யோகா பயிற்சி அளித்தார்.
நீதிபதி இளையராஜா சுப்பையா தலைமையில் சமூக ஆர்வலர்கள் தில்லைபாக்கியம், சுடலை, பெரியநாயகம், மதன், பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு மூலம் யோகா பயிற்றுனர் களஞ்சியம் ஏற்பாட்டில் ராமேஸ்வரத்தில் மங்கம்மா சத்திரம், சுவாமி விவேகானந்தர் வித்யாலயா பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

