/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் முன் விரோதம்: 7 பேர் மீது வாளால் தாக்குதல்
/
தேர்தல் முன் விரோதம்: 7 பேர் மீது வாளால் தாக்குதல்
தேர்தல் முன் விரோதம்: 7 பேர் மீது வாளால் தாக்குதல்
தேர்தல் முன் விரோதம்: 7 பேர் மீது வாளால் தாக்குதல்
ADDED : ஏப் 21, 2024 12:40 AM
சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலால் ஏழு பேர் காயமடைந்தனர்.
சாயல்குடி அருகே கடுகுசந்தையில் நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் நடந்தது.
அன்று மாலை ஒரு இளைஞர் மற்றொரு சமுதாயத்தினர் வசிக்கக்கூடிய பகுதியில் சென்றார். அங்கு இருந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை மனதில் வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றொரு சமூகத்தினர் வசிக்கக்கூடிய தெருவில் நேற்று இரவு 7:00 மணிக்கு சென்றபோது இளைஞர் ஒருவர் நீண்ட வாளால் கடுகுச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த செல்வி 45, மணிகண்டன் 23, முகேஷ் 21, இருளாயி 48, வெள்ளத்தாய் 56, சிவமுருகன் 21, அரவிந்த் 19 ஆகிய ஏழு பேரையும் வெட்டினார்.
காயமடைந்த ஏழு பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிராம மக்கள் சேர்த்தனர்.
வெட்டியவரை கைது செய்யக்கோரி ராமநாதபுரம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 8:30 மணிக்கு பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாயல்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

