/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 14, 2024 04:40 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் குலசேகர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில தலைவர் மணிமேகலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
புதிய மருத்துவக்காப்பீடு திட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும். சில காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை மீறி சிகிச்சை கட்டணம் வசூலில் மோசடியில் ஈடுபட்டுள்ளன. அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமாகவே மாதந்தோறும் வருமான வரிபிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு பழைய நடைமுறைப்படி ஆசிரியர்கள் விருப்படி வருமான வரி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்டப் பொருளாளர் ஜேம்ஸ்மேரி, மாநில செயற்குழு உறுப்பினர் முனியம்மாள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.