/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டாயக் கல்வி உரிமைத் தொகையை வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை
/
கட்டாயக் கல்வி உரிமைத் தொகையை வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை
கட்டாயக் கல்வி உரிமைத் தொகையை வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை
கட்டாயக் கல்வி உரிமைத் தொகையை வழங்க தனியார் பள்ளிகள் கோரிக்கை
ADDED : ஆக 24, 2024 03:37 AM

ராமநாதபுரம்: 2023--24ம் ஆண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைத் தொகையை அரசு விரைவில் வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்தியுள்ளன.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச்செயலாளர் செல்லதுரை அப்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கக்கூடாது என்ற அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், 2023-2024 ஆண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைத் தொகையை தனியார் பள்ளிகளுக்கு அரசு உடன் வழங்க வேண்டும்.
தொடர் அங்கீகார கோப்புகளை பழைய முறைப்படியே புதுப்பித்து தர வேண்டும். புத்தகதிருவிழா, அரசு விழாக்களுக்கு ஆர்.டி.ஓ., மூலம் தனியார் பள்ளிகளின் பஸ்களை கேட்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் சங்கத்தின் பொருளாளர் செந்தில்குமார், தாளாளர்கள் ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்., பள்ளி ஜெயக்குமார், வேலுமாணிக்கம் பள்ளி ராஜீவ், ராமேஸ்வரம் நேஷனல் பள்ளி செந்தில்குமார், ராமநாதபுரம் ஆல்வின் பள்ளி துளசிராம், முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.