/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா தமிழக மீனவர்கள் பங்கேற்பதில் சிக்கல்

ADDED : பிப் 25, 2025 07:12 AM
ராமநாதபுரம் : கச்சத்தீவில் மார்ச் 14, 15ல் புனித அந்தோணியார் சர்ச் திருவிழா நடக்கவுள்ளது. மீனவர்கள் ஸ்டிரைக் காரணமாக திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா ஆண்டு தோறும் இரண்டு நாட்கள் நடக்கும். தமிழக, இலங்கை மீனவர்கள் பங்கேற்பர். ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்யும். இந்தாண்டு மார்ச் 14, 15ல் நடக்கிறது.
இதற்கிடையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து வருகிறது. நேற்று முன் தினம் மட்டும் 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை அரசு 32 மீனவர்களை கைது செய்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
பறிமுதலான தமிழக படகுகளை ஏலம் விடும் முயற்சியிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது மீனவர்களிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்ற பிரச்னைகளால் கடந்தாண்டு மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணித்தனர். இதே போல் 2016ல் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணித்தனர்.
இந்தாண்டும் மார்ச் 14, 15ல் நடக்கும் கச்சத்தீவு திருவிழாவிற்கு மீனவர்கள் செல்வார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.