/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொள்முதல் நிலைய பணியாளர் 4 மாத சம்பளம் இன்றி தவிப்பு
/
கொள்முதல் நிலைய பணியாளர் 4 மாத சம்பளம் இன்றி தவிப்பு
கொள்முதல் நிலைய பணியாளர் 4 மாத சம்பளம் இன்றி தவிப்பு
கொள்முதல் நிலைய பணியாளர் 4 மாத சம்பளம் இன்றி தவிப்பு
ADDED : மே 15, 2024 06:40 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில்பணிபுரிந்த தற்காலிக பணியாளர்களுக்கு 4 மாதம் சம்பளம்கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்சார்பில் 70 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள்அமைக்கப்பட்டது. இவ்விடங்களில் நெல் மூடைகளை அளவிட்டு வாங்குவதற்காக தற்காலிக பணியாளர்களாக 60பேர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களுக்குநிர்ணயிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தை தராமல் இழுத்தடிப்பதாக புலம்புகின்றனர்.நேற்று ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகபொது மேலாளர் அலுவலகத்தை பணியாளர்கள்முற்றுகையிட்டனர். மண்டல மேலாளர் 'பிசி' ஆக உள்ளார்அவரை பார்க்க முடியாது என அலுவலர்கள் கூறினர்.
பணியாளர்களுடன் இரண்டாம் கட்ட அதிகாரிகள்பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த வாரத்திற்குள்வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் பணியாளர்கள்கலைந்து சென்றனர்.

