/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக்.31 வரை தடை
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக்.31 வரை தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக்.31 வரை தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் அக்.31 வரை தடை
ADDED : செப் 01, 2024 01:47 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்., 11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள், அக்.,30ல் பசும்பொன்னில்முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நடப்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.,9 முதல் அக்,.31 வரை 163(1) தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
செப்.,9 முதல் 15 வரையும், அக்.,25 முதல் 31 வரை வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலிசெலுத்த வர தடை விதிக்கப்படுகிறது.
அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும். நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 1 கி.மீ.,க்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.