/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாசில்தார், மனைவி மீது சொத்துக்குவிப்பு வழக்கு
/
தாசில்தார், மனைவி மீது சொத்துக்குவிப்பு வழக்கு
ADDED : ஆக 23, 2024 03:08 AM

ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராக பணிபுரிந்த போது லஞ்சம் வாங்கி கைதான தென்னரசு, அவரது மனைவி அரசு சித்த மருத்துவர் சாந்தி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2023ல் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக தென்னரசு 57, பணிபுரிந்தார். இவர் 2023 அக்., 5ல் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தர ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார். பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் 2023 அக்., 6 ல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.45 லட்சத்து 73 ஆயிரத்து 500 மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதில் தென்னரசு, அவரது மனைவி விருதுநகர் மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவராக உள்ள சாந்தி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் நேற்று ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

