ADDED : ஜூலை 21, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில இளைஞரணி துணை செயலாளர் சாய் சரவணன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுப்பதோடு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவர். மேகதாது அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார். ராமநாதபுரம் மாவட்ட சட்டசபை தொகுதி தலைவர்கள் முனியராஜ், ராமன், செல்வராஜ், போஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். –––
