/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியாறு அணைக்காக நாளை போராட்டம்
/
பெரியாறு அணைக்காக நாளை போராட்டம்
ADDED : ஜூன் 02, 2024 02:36 AM

ராமநாதபுரம்:-உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை தட்டிக்கேட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதுரை நீர்வள ஆதார பிரிவு முதன்மை பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் நாளை(ஜூன் 3) முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க சங்க மாநில செயலாளர் ராம முருகன் கூறியதாவது:
கேரள அரசு முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது.
கேரள அரசின் இந்த செயல்களை கண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அமைதி காக்கிறது. முல்லைப் பெரியாறு மூலம் பாசனம் பெறும்விவசாயிகள் தொடர்ந்து இதற்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்து வருகின்றனர். காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை மதுரை நீர்வள ஆதார பிரிவு முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார்.