ADDED : ஜூன் 20, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரக்குழு உறுப்பினர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, வட்டாரக் குழு செயலாளர் தட்சிணாமூர்த்தி, மற்றும் உறுப்பினர்கள் ஆறுமுகம், முருகன், ஆரோக்கியம், முருகபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
