ADDED : ஆக 17, 2024 12:18 AM

கமுதி : கமுதி கவுரவ தொடக்கப்பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பில் இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டது.
கமுதியில் கவுரவ தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது உள்ள நிலையில் ஏராளமானோர் ஆங்கில வழிக் கல்வியை தேடி செல்கின்றனர். இதையடுத்து தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பில் நடப்பாண்டில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உறவின் முறை டிரஸ்டி ஹேமந்திரா பாலன் தலைமை வகித்தார். தலைவர் மாரியப்பன், செயலாளர் கந்தசாமி, தொடக்கப்பள்ளி செயலாளர் நாககுமார் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மாரி மகேஸ்வரி வரவேற்றார். புதிதாக சேர்ந்த 5 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் சுப்புலட்சுமி, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட கவுரவ தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினரை பெற்றோர் பாராட்டினர்.