ADDED : ஆக 19, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாய்பாசம் அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் அதிகரையை சேர்ந்தவருக்கு தையல் இயந்திரத்தினை அப்பகுதியின் ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா, பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் வழங்கினர்.
5 நபர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. தாய்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது ஏற்பாடுகளை செய்தார்.--

