/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜூலை 02, 2024 06:13 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பழைய கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.
வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 386 மனுக்கள் பெறப்பட்டது. விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், அயன் பாக்ஸ்கள், தாட்கோ சார்பில் இயற்கை மரணம் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு கண்விழி ரேகை இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.