/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பி.எஸ்.என்.எல்., 'சர்வீஸ் கட்' வாடிக்கையாளர்கள் அவதி
/
பி.எஸ்.என்.எல்., 'சர்வீஸ் கட்' வாடிக்கையாளர்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., 'சர்வீஸ் கட்' வாடிக்கையாளர்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., 'சர்வீஸ் கட்' வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : ஜூன் 10, 2024 11:24 PM
பெருநாழி : பெருநாழியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.
பெருநாழியில் வங்கி, அரசு பள்ளிகள், போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் பயன்பாடு பெரும்பாலும் பி.எஸ்.என்.எல்., சேவையாகும்.
பெருநாழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் 3000த்திற்கும் அதிகமானோர் உள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
பெருநாழியில் பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் உள்ள உயர் அழுத்த டிரான்ஸ்மீட்டரில் பழுது ஏற்பட்டதால் அதனை சரி செய்யாமல் உள்ளனர்.
எனவே காரைக்குடி பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள் பெருநாழி எக்ஸ்சேஞ்சில் நிலவும் குறைபாட்டை சர்வீஸ் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சேவையின்றி ஏராளமானோர் தனியார் அலைபேசி எண்களுக்கு மாறிவிடுகின்றனர். குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.