/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
/
மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2024 10:39 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம் கிராமத்தில்உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
அழகன்குளத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் ஹிந்து, முஸ்லிம் ஐக்கிய பரிபாலன சபை, ஊர் மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் அழகன்குளத்தில் கல்வி நிறுவனம், கோயில் அருகே இயங்கி வரும் தனியார் மதுக்கடையால் பள்ளி மாணவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மதுக்கடையை அகற்ற வேண்டும் என 2019 முதல் அழகன்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இம்மனு மீது விசாரணை செய்து மதுக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.