/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவுன்சிலர்கள் டிஸ்மிஸ் அரசிதழில் வெளியீடு
/
கவுன்சிலர்கள் டிஸ்மிஸ் அரசிதழில் வெளியீடு
ADDED : மார் 22, 2024 02:18 AM
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், ஏழாவது வார்டு கவுன்சிலர் மனோகரன், பங்குதாரராக உள்ள நிறுவனம் வழியே, ஊராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்ததாக, புகார் எழுந்தது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியதில், புகார் உண்மை என தெரிந்தது.
அதைத் தொடர்ந்து, அவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.
அதுபோல, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, முக்குலம் சாத்தனுார் கிராம ஊராட்சி, மூன்றாவது வார்டு உறுப்பினர், பிரவீன்ராஜ், தொடர்ந்து மூன்று ஊராட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை. மேலும், அவர் தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாடு சென்றுள்ளார். அதன் காரணமாக, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- நமது நிருபர் -

