ADDED : ஆக 06, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தொண்டலை மேலக்கரை முனியைய்யா கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை முதல் இரவு வரை தொடர்ந்து பூஜைகள் நடந்தது.
சுற்றுவட்டார கிராம பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெண்கள் பொங்கலிட்டும், நெய்விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை ஓய்வு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.