/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருப்பண்ணசுவாமிக்கு பவுர்ணமி படி பூஜை
/
கருப்பண்ணசுவாமிக்கு பவுர்ணமி படி பூஜை
ADDED : ஜூலை 22, 2024 04:47 AM

பரமக்குடி: பரமக்குடி நகர் புதுநகரில் உள்ள 18ம் படி கருப்பண்ணசுவாமிக்கு பவுர்ணமி படி பூஜை நடந்தது.
இக்கோயில் ஜூலை 7ல் 18 படிகள் மீது கருப்பண்ணசுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை விழா நடக்கிறது.
நேற்று காலை ஆடி மாத பவுர்ணமி விழாவையொட்டி படி பூஜை நடந்தது. அப்போது கருப்பண்ணசுவாமி மற்றும் 18 படிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர் கருப்பணுக்கு சந்தன காப்பு சாற்றி, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் 18 படிகள் அலங்கரிக்கப்பட்டு, எலுமிச்சை மாலைகள் சாற்றி தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஏற்பாடுகளை வெள்ளை குதிரை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி மோகன்தாஸ், நிர்வாகிகள் செய்தனர்.