/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பங்குனி அமாவாசையில் முன்னை மரத்திற்கு பூஜை
/
பங்குனி அமாவாசையில் முன்னை மரத்திற்கு பூஜை
ADDED : ஏப் 08, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவள நிற வல்லியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு முன்னை மரத்திற்கு பூஜைகள் நடந்தது.
பூவேந்திய நாதர் கோயிலுக்கு இடதுபுறத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த முன்னை மரம் உள்ளது. நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், யாக வேள்விகள் நடந்தது. முன்னை மரத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதிகளில் உலா வந்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் மற்றும் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

