/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூஜாரிகள் நலவாரிய அடையாள அட்டை புதுப்பிக்க வேண்டும்
/
பூஜாரிகள் நலவாரிய அடையாள அட்டை புதுப்பிக்க வேண்டும்
பூஜாரிகள் நலவாரிய அடையாள அட்டை புதுப்பிக்க வேண்டும்
பூஜாரிகள் நலவாரிய அடையாள அட்டை புதுப்பிக்க வேண்டும்
ADDED : ஜூலை 07, 2024 01:54 AM
கடலாடி: கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பூஜாரிகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ள பூஜாாரிகளை கண்டறிந்து அவற்றை புதுப்பிக்க வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வலியுறுத்தி பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு, கடலாடியை சேர்ந்த தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
தமிழக முழுவதும் பூஜாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். கிராம கோயில் பூஜாரிகளுக்கு 2010 ஆம் ஆண்டு பூஜாாரிகள் நலவாரியத்தில் இருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கடந்த ஆட்சி காலத்தில் நல வாரியத்திற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. பூஜாரிகள் நலவாரியம் பெயரளவில் மட்டுமே இருந்தது. தற்போதைய ஆட்சியில் பூஜாரிகள் நல வாரிய உறுப்பினர்கள் ஆன்லைனில் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.
இந்தப் பணிகள் மிகவும் தொய்வு நிலையில் உள்ளது. வாரிய அடையாள அட்டை புதுப்பிக்க மாவட்ட ஹிந்து சமய அறநிலைத்துறை போதிய அக்கறை செலுத்தாத காரணத்தால் அடையாள அட்டை புதுப்பிக்க செல்லும் பூஜாரிகள் மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் தொடர் அலைக்கழிப்பை சந்திக்கின்றனர்.
2019ல் தமிழகம் முழுவதும் வாரிய உறுப்பினர்களாக 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது புதிய உறுப்பினர்கள் 5000 பேர் மட்டுமே. அவர்களுக்கு தற்போது புதியதாக ஆன்லைனில் பதிவு செய்யும் பணியால் ஓராண்டு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
இதனால் 21 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வந்த பூஜாரிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே தமிழக அரசு பூஜாரிகள் நலவாரியத்தை செயல்படக்கூடிய வாரியமாக செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே அடையாள அட்டை வைத்துள்ள பூஜாரிகளை கண்டறிந்து 14 ஆண்டுகளாக புதுப்பிக்க முடியாமல் உள்ளதை புதுப்பிக்க வேண்டும் என்றனர்.