/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடி மாதம் கூழ் வார்த்தல் தானியம் வழங்க வேண்டும் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை
/
ஆடி மாதம் கூழ் வார்த்தல் தானியம் வழங்க வேண்டும் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை
ஆடி மாதம் கூழ் வார்த்தல் தானியம் வழங்க வேண்டும் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை
ஆடி மாதம் கூழ் வார்த்தல் தானியம் வழங்க வேண்டும் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2024 03:34 AM
கடலாடி: அம்மன் கோயில்களில் ஆடி மாதம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்கு தேவையான கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற தானியங்களை விலையின்றி வழங்க வேண்டும் என பூஜாரிகள்நலச் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு, கடலாடியைச் சேர்ந்த தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அம்மன் கோயில்களில் ஆடி மாதம் கூழ்வார்த்தல் நடக்கும். அதே சமயம் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற கோயில்கள் மற்றும் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடக்கும் அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்வுக்கு போதிய தானியங்கள் கிடைப்பதில்லை.
கோயில்களில் தானியங்களை வாங்கும் அளவிற்குபோதிய வருவாயும் இல்லாதது முதல் காரணமாக உள்ளது. விரைவில் ஆடி மாதம் வர உள்ள நிலையில் தமிழக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழ அம்மன் அருள் அவசியம்.
எனவே கோயில் பூஜாரிகளின் கோரிக்கையாக உள்ள கட்டுப்பாட்டில்இல்லாத கிராமப்புற கோயில்கள் மட்டுமின்றி ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும் அம்மன் கோயில்களுக்கும் கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற தானியங்களை விலையின்றி வழங்க வேண்டும்.
அல்லது அதற்குரிய தொகையை வழங்கினால் அந்த கோயில்களில் எல்லாம் கூழ்வார்த்தல் நிகழ்வு நடைபெறும் என்றனர்.

