/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றில் மணல் திருடியவருக்கு குண்டாஸ்
/
வைகை ஆற்றில் மணல் திருடியவருக்கு குண்டாஸ்
ADDED : மார் 14, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருடிய குணா என்ற சிவக்குமாரை 22, பரமக்குடி தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இவர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மத்திய சிறையில் சிவக்குமார் அடைக்கப்பட்டார். இதே போன்று மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சந்தீஷ் எச்சரித்துள்ளார்.--