ADDED : மார் 09, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம் : பனைக்குளத்தில் நடைபெற்ற திருக்குர்ஆன் ஓதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பனைக்குளம் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில்31ம் ஆண்டு திருக்குரான் ஓதும் போட்டி நடைபெற்றது. 11 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும், 12 வயதிற்குகு மேற்பட்ட மாணவர்களுக்கும் போட்டிகள் நடந்தன. 382 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். முஸ்லிம் நிர்வாக சபை மற்றும் ஐக்கிய முஸ்லிம் சங்க நிர்வாகிகள்முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமை இமாம் ஹாஜா முகைதீன்ஆலிம் சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகி முகமது இக்பால் வரவேற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர். ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.