/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஆக 09, 2024 10:46 PM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆண்டு தோறும் 25 நாட்கள் நடைபெறும்.விழாவின் துவக்கமாக நேற்று மாலை 6:30 மணிக்கு மூலவர் திரவுபதிஅம்மனுக்கு முதல் மண்டகப்படி நிகழ்வாக பிச்சனார்கோட்டை கிராமத்தினர் சார்பில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
தொடர்ந்து இரவில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் கொடி மரத்தில் இரவு 9:55 மணிக்கு விழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.
விழாவின் தொடர்ச்சியாக சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திருக்கல்யாணம், சப்ராபர்ணகோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட பல்வேறு மண்டக படிதாரர்களின் நிகழ்வுகள் நடைபெற்று ஆக.30ல் முக்கிய விழாவான பூக்குழி விழா நடக்கிறது.
மறுநாள் மஞ்சள் நீராடுதல் விழாவும், சிறப்பு அபிஷேகங்களும் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து செப்.3ல் நடைபெறும் பட்டாபிஷேக நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் ஹிந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.