/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ADDED : செப் 01, 2024 05:11 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா ஆக.9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ணகோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
விழாவின் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை 5:55 மணிக்கு பூக்குழி விழா நடந்தது.
முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள், அரசூரணி குளத்து நீரில் நீராடி அங்கிருந்து ஊர்வலமாக சென்று திரவுபதி அம்மன் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக இன்று (செப்.1) இரவு மஞ்சள் நீராடுதல் விழா நடக்கிறது.
செப்.3 ல் நடைபெறும் பட்டாபிஷேக விழாவுடன் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.