/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முயல் வேட்டையாடியவர்களுக்கு அபராதம்: துப்பாக்கி பறிமுதல்
/
முயல் வேட்டையாடியவர்களுக்கு அபராதம்: துப்பாக்கி பறிமுதல்
முயல் வேட்டையாடியவர்களுக்கு அபராதம்: துப்பாக்கி பறிமுதல்
முயல் வேட்டையாடியவர்களுக்கு அபராதம்: துப்பாக்கி பறிமுதல்
ADDED : மார் 07, 2025 01:59 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் முயல்களை வேட்டையாடிய இருவருக்கு ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, 5 பாதரச குண்டுகள், ஒரு முயலை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
எஸ்.பி.பட்டினம் போலீசார் நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு வட்டாணம் கடற்கரை பாலம் அருகே முயல் வேட்டைக்கு சென்று வந்த இருவரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மச்சூர் கிராமத்தை சேர்ந்த சர்தார் 35, முகமது உசேன் 29, என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி(ஏர்கன்), 5 பாதரச குண்டுகள், ஒரு முயலை பறிமுதல் செய்து ஆர்.எஸ்.மங்கலம் வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தலா ரூ.65 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வன உயிரின வேட்டையில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என மாவட்ட வன அலுவலர் ேஹமலதா எச்சரித்தார்.