ADDED : ஜூலை 07, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
உச்சிபுளி: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் முருகன் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர்கள் சித்தி மெர்ஜிதா, ஆய்வாளர் கங்காதேவி, உதவியாளர் கண்ணகி ஆகியோர் மாடுகள், கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இட்டனர். கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.––––
